தமிழ்நாடு

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது! சைலேந்திர பாபு எச்சரிக்கை

DIN


தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மாநில கமாண்டோ பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் என கூடுதலாக 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT