கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், ஆவடி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, அடுத்த இரு நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT