சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.