முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் பிரசவத்தில் பெண் இறப்பு:  இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம் 

சிவகாசியில் புதன்கிழமை பிரசவத்தின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார் அப்பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு கோரி அந்த மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

Updated On : 26 ஜனவரி, 2022 at 11:30 AM
சிவகாசியில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்ணின்  உறவினர்கள் இழப்பீடு வேண்டி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:44 PM


சிவகாசியில் புதன்கிழமை பிரசவத்தின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார் அப்பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு கோரி அந்த மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(22). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி காயத்ரி(21) இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்நிலையில், காயத்ரி கர்ப்பமுற்று பிரசவத்திற்காக சிவகாசி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை சுமார் 12 45 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை மருத்துவர்கள் ஜியோ(63,) இவரது மகன் டேனியல்(32) இவரது மனைவி பிரசன்னா(29) ஆகியோர் எடுத்தனர்.

Advertisement

இந்நிலையில், தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு காயத்திரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுமார் 2 30 மணிக்கு உயிரிழந்தார். தகவலறிந்த காயத்ரியின் உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் காயத்ரி உயிரிழந்தார். எனவே ரூ.5 லட்சம் இழப்பீடு வேண்டி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சென்ற சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் காவல் ஆய்வாளர் சுப குமார் ஆகியோர் காயத்ரி உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து மருத்துவர் ஜியோ ரூ. 5 லட்சம் இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டார். பின்னர் காயத்திரியின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து காயத்திரியின் சடலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.