ஆடியோ விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறது பாஜக
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது.
நிதியமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இந்த ஆடியோ உண்மையல்ல என்றும் தனக்கு எதிராக எடிட் செய்து புனையப்பட்டது என்றும் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆடியோ குறித்து சுதந்திரமான அமைப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக குழு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து வலியுறுத்தவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (ஏப். 23) இரவு 7 மணிக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.