அண்ணாமலை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அண்ணாமலை நாளை தில்லி பயணம்? 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை திடீர் தில்லி பயணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

DIN

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை திடீர் தில்லி பயணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அழைப்பின் பேரில் தில்லிக்கு அவர் அவசர பயணம் மேற்கொள்கிறார். என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தி வரும் நிலையில் அண்ணாமலை தில்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக-அதிமுக தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 28ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கிய அவர் 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT