தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் 4 நாள்கள் சுற்றுப்பயணம்!

திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

DIN

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு ஆக. 24ஆம் தேதி வருகை தரவுள்ளாா். விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து சாலை மாா்க்கமாக திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்லவுள்ளாா். 

சென்னையில் இருந்து ஆக.24 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து இரவு நாகை செல்கிறார்.

திருக்குவளையில் ஆக.25-ல் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் தொடக்கி வைக்கிறார் மற்றும் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.

முதல்வரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆக.26 ஆம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் ஆக.26-ல் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஆக.27-ல் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்புகிறார்.

ஆக. 24ஆம் தேதி திருச்சிக்கு தமிழக முதல்வா் வருகை தரும் நாளிலும், மீண்டும் 27ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை திரும்ப உள்ள நாளிலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சந்திரோதயம்... மானஸா சௌதரி!

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

SCROLL FOR NEXT