சந்திரயான் திட்ட இயக்குநரின் தந்தைக்கு ஆட்சியர் வாழ்த்து
சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழுப்புரம்: சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி புத்தகங்களை வழங்கினார்.
இதையும் படிக்க | சந்திரயான் 3: இந்தியாவின் உலக சாதனை; நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது
Advertisement
Advertisement
தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிக்கரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் உலகுக்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரியது என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.