மதுரை ரயில் தீ விபத்து: தயார் நிலையில் 5 மருத்துவக் குழுக்கள் - மா. சுப்பிரமணியன்
மதுரை ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை: மதுரை ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை ரயில் நிலையம் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள், மதுரை ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள், விரைவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் என்றார்.