முகப்பு
தமிழ்நாடு

தோல்வி அல்ல, எச்சரிக்கை: கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் பெற்றது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
கே.எஸ். அழகிரி
பகிர்:

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்றது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமிழ்நாடு காங்கிரஸி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4.81 கோடி வாக்குகள் பெற்ற பா.ஜ.க. 342 இடங்களையும், 4.92 கோடி வாக்குகளை பெற்ற காங்கிரஸ் 235 இடங்களையும் பெற்றுள்ளன. 

பத்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்ற காங்கிரஸை போல சற்றேறக்குறைய ஒன்றரை மடங்கு சட்டமன்ற இடங்களை பா.ஜ.க. பெற்றுள்ளது. இது தான் இன்றைய தேர்தல் முறையில் வெற்றி தோல்விகள் அமைகின்றன. 

இதில் உண்மை நிலை என்னவென்றால் இன்றைய தேர்தல் முறையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியவில்லை. மாறாக, தேர்தல் கணக்குகளை சரியாக கையாள தெரிந்தவர்களே வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய வெற்றியை தான் பா.ஜ.க. பெற்றிருக்கிறது. 

எனவே, மக்கள் பா.ஜ.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற கருத்து மிக மிக தவறானது. ஆனாலும் இது தோல்வியாக இல்லையென்றாலும் முடிவுகளை எச்சரிக்கையோடு காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டும். கீழே உள்ள அட்டவணை காங்கிரஸ் - பா.ஜ.க.வின் பலத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →