தமிழ்நாடு

நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? - அமைச்சர் எஸ். ரகுபதி

DIN

புதுக்கோட்டை: சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை கோரியவர்கள், இப்போது நாடாளுமன்றத்துக்குள் நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்? என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை  அவர் அளித்த பேட்டி:
சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நடந்த சம்பவத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணையைக் கோரினார்கள். இப்போது, நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு யாரை வைத்து விசாரணை நடத்தப் போகிறார்கள்?

தனக்கு நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே எம்.பி.க்கள் பாஸ் கொடுப்பார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடக பாஜக உறுப்பினர் எப்படி பாஸ் கொடுத்தார்? புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி உண்மையைச் சொல்ல வேண்டும்.

திமுகவினர் எப்படி நாகரீகமாகப் பேச வேண்டும் என ஆளுநர் தமிழிசை எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை.அமைச்சர் உதயநிதி துணிச்சலாகப் பேசிவருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு சொல்கிறார்கள்.

ஆளுநர் முறைப்படி அரசியல் பேசக் கூடாது. ஆனால் தமிழிசை தொடர்ந்து தன்னை பாஜக மாநிலத் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டு பேசி வருகிறார்.

புழல் சிறையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவற்றையும் மீறி ஒருவர் தப்பியிருக்கிறார். பார்வையாளர் பகுதிக்கு வந்து தப்பிப்போனதாக சொல்கிறார்கள். நிச்சயம் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைப்பார்கள் என்று ரகுபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT