முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வியாழக்கிழமை விடப்பட்டது.
வியாழக்கிழமை நிலவரப்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.25 அடியாக இருந்த நிலையில், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக சுமார் 12 மணியளவில் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது.
ரூல் கர்வ் அட்டவணைப்படி 140 அடியை எட்டும் போது அணையின் கீழ்புறப்பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடவேண்டும்.
அதனடிப்படையில் வியாழக்கிழமை அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.