தமிழ்நாடு

சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

DIN


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில், உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.  

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். 

இன்று (டிச.23) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு  அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.

பல்வேரு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய ஈட்டி-குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி அரசுப் பள்ளி மாணவி தோ்வு

பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: தந்தை, மகன் கைது

தஞ்சாவூா் மாநகா் பகுதியில் நவ. 5-இல் மின்தடை

அனுமதி பெறாத பூச்சி மருந்து விற்பனை: 5 கடைகளுக்கு தற்காலிகத் தடை

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 23 பயணிகள் காயம்

SCROLL FOR NEXT