முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் 1வது முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று (டிச.22) விடுமுறை!

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 1 ஆவது முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 22 டிசம்பர், 2023 at 9:51 AM
கோப்புப்படம்
பகிர்:

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 1 ஆவது முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்ற நிலையில், வெள்ளம் வடியாத மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் 9 பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்.

Advertisement

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்து வருவதால் அங்கிருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கனமழையால் புத்தகத்தை இழந்த மாணவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை(டிச.22) முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லை மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜனவரி 2 ஆம் தேதிக்கு பிறகு மழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளனீர் வடியாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.