தமிழ்நாடு

சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு

DIN

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் வருகிற ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்துகிறது. 

இந்நிலையில் சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 6.60 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) பள்ளிக் கல்வித்துறை இணைந்து முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT