தமிழ்நாடு

செவிலியர்களுக்கு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பு: காவல்துறையினர் விரட்டுவதாக புகார்

DIN

சேலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்துவதற்காக வந்த செவிலியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காவல்துறையினர்கள் தங்களை விரட்டுவதாகவும் செவிலியர்கள் புகார் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திய செவிலியர்களை பணி நீக்கம் செய்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், மருத்துவத் தேர்வு ஆணையம் மூலம் தங்களை தேர்வு செய்து தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாள்களாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று போராட்டம் நடத்த வந்த செவிலியர்களுக்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் விரட்டுவதாக செவிலியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

தங்கள் போராட்டம் குறித்து அதிகாரிகள் தவறான தகவல்களை அரசுக்கு தெரிவிப்பதாகவும், மீண்டும் பணி வேண்டும் என்று கேட்கிறோமே தவிர நிரந்தர பணி வேண்டும் என கேட்கவில்லை என்றும் அரசு தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள்: இம்முறை..

குஜராத்: நர்மதா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பலி

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

SCROLL FOR NEXT