தமிழ்நாடு

சாலை விபத்தில் இருவர் பலி: பேருந்தும் தீப்பிடித்ததால் பரபரப்பு!

கிருஷ்ணகிரி அருகே கர்நாடக அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

DIN

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் உள்பட இருவர் பலியாகினர். கர்நாடக அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  குருபரப்பள்ளி அருகே உள்ள  ஒட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன்(45). ராணுவ வீரர். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(35).

இவர்கள், இருவரும் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில்  சாலையிலிருந்து சிக்காரி மேடு அருகே சென்றுக் கொண்டிருந்தனர்.  அப்போது, பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலியாகினர்

மேலும்,  பேருத்தில், இருசக்கர வாகனம் சிக்கி தீப்பொறி ஏற்பட்டு, பேருந்து தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்தனர். இந்த விபத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT