பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு 
தமிழ்நாடு

பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

DIN

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

பிறகு, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்துக்கு வந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் காவலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் உரிய நடைமுறையை பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். கடந்த  அதிமுக ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பது குறித்த பட்டியல் உள்ளது என்று கூறினார்.

மேலும், பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதி அளித்தார். கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பது திமுக ஆட்சிதான் என்றும் கூறினார்.

முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், பிறகு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT