கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேல் ஆடு, கோழி, சேவல் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின.
தமிழ்நாடுகொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேல் ஆடு, கோழி, சேவல் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின.
சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் விற்பனையாகின.
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆயிரக்கணக்கான ஆடு, கோழி, சேவல்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
பண்டிகை நாட்கள் என்பதால் கர்நாடகம், கேரளம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்து ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனர். பண்டிகை நாட்கள் என்பதால் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக இருந்தன. மற்ற நாட்களைவிட இந்த வாரச் சந்தையில் இரு மடங்கு கூடுதலாக விற்பனையானது.