சென்னையில் நாளை(ஜன. 21) பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!
இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் நாளை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் நாளை(ஜன. 21) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்தும், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைக் கண்டித்தும் தமிழக பாஜகவின் ஆன்மிகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை(ஜன. 21) காலை 10 மணிக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கடலூரில் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் சம்மதம்