ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. ஆளுநர் ரவி ஏன் தில்லி சென்றார் என்பது பற்றி எனக்கு தெரியாது.
அதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும். காவலர் நலவாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஏன் அதிக பணி வழங்குகிறீர்கள்.
கோவை சரக டிஐஜி விஜயகுமாருக்கு 6 மாதம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே சந்தேகம். ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது. ஊழலை பற்றி பேச அமைச்சர் ரகுபதிக்கு தகுதி கிடையாது.
சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.