முகப்பு
தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 9 ஜூலை, 2023 at 8:34 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:31 PM

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை  461 விசைப்படகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில் கட்சத்தீவு  மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பெனிட்டோ  லியோன் மற்றும் பாலா ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளையும்  அதில் இருந்த கிறிஸ்து, ஆரோக்கியராஜ், கெர்மாஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன், பிரியன், ஈசாக், ஜான், பிரதீபன், அந்தோணி, சார்ஜ், ஜனகர் ஆகிய 15 மீனவர்களை சிறை பிடித்து காங்கேயம் துறைமுகம் அருகே உள்ள மயில்வெட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.

Advertisement

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.