சென்னையில் 2வது நாளாக இரவில் மழை!
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது.
சென்னையிலுள்ள வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை,மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது.
இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் விடாமல் மழை பெய்தது.
இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக இரவில் மழை பெய்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.