விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு தர்னாவில் ஈடுபட்டுள்ள பாஜகவினர். 
தமிழ்நாடு

விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னா

விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN


விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவரை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக வி.ஏ.டி. கலிவரதன் இருந்து வருகிறார். இவர் கட்சியின் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிவருவதாகவும், தேவையற்ற காரணங்களை கூறி கட்சி, சார்பு அணிகளின் நிர்வாகிகளைப் பொறுப்புகளிலிருந்து நீக்கி வருவதாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், இதனைக் கண்டித்தும் வி.ஏ.டி. கலிவரதனைக் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தியும் பாஜகவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 11 மணி முதல் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

ஒசூரில் குட்கா கடத்த முயன்ற 2 போ் கைது: 855 கிலோ குட்கா, 3 காா்கள் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே வெவ்வேறு சம்பவத்தில் இருவா் கைது

ஆத்தூா் அருகே நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 3 போ் பலத்த காயம்

நடுவானில் பயணிக்கு உடல்நல பாதிப்பு: கேரளத்துக்குத் திருப்பிவிடப்பட்ட சவூதி விமானம்

SCROLL FOR NEXT