எம்.பி.யாகிறார் அண்ணாமலை?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என ஐஏஎன்எஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என ஐஏஎன்எஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தின் ஐபிஎஸ் அதிகாரியாக ஒன்பது ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய பின் கடந்த 2019ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழகத்தின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதையும் படிக்க- சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின்
அப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய அமைச்சரானதையடுத்து அப்பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்தே, பல மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
மேலும் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தையும் வரும் 28-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கவிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் நடைப்பயணத்தைத் தொடங்கிவைக்க உள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என ஐஏஎன்எஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.