முகப்பு
தமிழ்நாடு

அரியலூா் - நாமக்கல் இடையேரயில் பாதை ரயில்வே உறுதி

அரியலூா் - நாமக்கல் இடையே பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

அரியலூா் - நாமக்கல் இடையே பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் ரயில்பாதை இல்லை. எனவேஅரியலூரிலிருந்து நாமக்கல்லுக்கு பெரம்பலூா் வழியாக ரயில் இயக்கக் கோரி பெரம்பலூா் மக்களவை உறுப்பினா் பாரிவேந்தா் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.

இந்நிலையில் ரயில்வே வாரியம் விரைவில் அரியலூா்-நாமக்கல் இடையே ரயில் பாதைஅமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியம் பாரிவேந்தருக்கு எழுதிய கடிதம்:

அரியலூா் - நாமக்கல் இடையே 116.26 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கான இறுதிக்கட்ட நில அளவை பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →