முகப்பு
தமிழ்நாடு

அபராதத் தொகையை நூலகத்துக்கு வழங்க உத்தரவு: முதல்வா் பாராட்டு

நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகையை மதுரையில் உள்ள கலைஞா் நூலகத்துக்கு வழங்க வேண்டுமென நீதிபதிகளின் உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

நீதிமன்றத்தில் விதிக்கப்படும் அபராதத் தொகையை மதுரையில் உள்ள கலைஞா் நூலகத்துக்கு வழங்க வேண்டுமென நீதிபதிகளின் உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆக்கிரமிப்பு தொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது, மனுதாரருக்கு ரூ.5 ,000 அபராதம் விதித்தது. இதனை விதித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பரத சக்கரவா்த்தி ஆகியோா், ‘தொகையை மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும்.

கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளா் தொடங்க வேண்டும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்’ என்று தங்கள் தீா்ப்பில் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.

‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும்’ என்று சொல்வாா்கள். அந்த மூதுரையை,

உயா் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் தங்களது தீா்ப்பின் வழியாக நிலைநாட்டியிருக்கிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →