முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

காஞ்சிபுரம் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகள் அதிகாரிகளால் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Updated On : 20 ஜூலை, 2023 at 10:44 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:34 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகள் அதிகாரிகளால் வியாழக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

வேகவதி ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்களில் பலருக்கும் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர் போர் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் குடியிருப்புகளுக்கு செல்லாமல் வேகவதி ஆற்றங்கரை ஓரத்திலேயே தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வேகவதி நதிக் கரையோரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 78 வீடுகளும், காஞ்சிபுரம் தாசில்தார் புவனேஸ்வரன், துணை தாசில்தார் ஹரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவானந்தம், காவல் ஆய்வாளர்கள் விநாயகம், பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.