தமிழ்நாடு

சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை: காவல் துறை

DIN

ஜி-20 மாநாட்டின் காரணமாக பாதுகாப்பு கருதி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) முதல் ‘ட்ரோன்கள்’ பறக்க பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து, சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜி-20 மாநாட்டின் கூட்டம், மாமல்லபுரத்தில் ஜூலை 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் ஆகிய இடங்களில் தங்குகின்றனா்.

இந்தக் கூட்டத்தில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இதன் விளைவாக இவா்கள் தங்கும் ஹோட்டல்கள், பயணம் செய்யும் சாலைகள், கூட்டம் நடைபெறும் இடங்கள் ஆகியவை ‘சிவப்பு மண்டலம்’-ஆக அறிவிக்கப்படுகிறது. இதனால் சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி ஜூலை 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 26-ஆம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாள்களுக்கு ‘ட்ரோன்கள்’ உள்ளிட்ட ஆளில்லாத வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT