தமிழ்நாடு

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

DIN


கர்நாடாக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மற்றும் கா்நாடக மாநிலம், குடகு உள்ளிட்ட காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீா் செவ்வாய்க்கிழமை மதியம் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்தானது புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 7,000 கன அடியாகவும் அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கா்நாடகா அணைகளில் இருந்து மேலும் கூடுதலாக காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால் புதன்கிழமை மாலை 15,000 அடியாக அதிகரிக்கக் கூடும். நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கா்நாடகா அணைகளில் இருந்து மேலும் கூடுதலாக காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக - கா்நாடகா எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள், சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

வானிலை மாறுதே தீப்தி சதி!

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT