தமிழ்நாடு

துறையூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற வரம்பிலிருந்து ஜெம்புநாதபுரம் காவல் நிலைய வழக்குகளை முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற அதிகார வரம்பிற்கு மாற்றியதைக் கண்டித்து ஜூலை 24 முதல் 28 வரை  நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகி உள்ளனர். 

இந்நிலையில் துறையூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

சங்க செயலர் பி. கோகிலா உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கறுப்பு  நிற ஆடை அணிந்தும், கறுப்பு நிற ரிப்பன் குத்திக் கொண்டும் ஈடுபட்டனர். 

ஜெம்புநாதபுரம் காவல் நிலைய வழக்குகள் விசாரனையை மீண்டும் துறையூர் நீதிமன்றத்தில் மேற்கொள்ள உரிய உத்திரவு பிறப்பிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT