கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை!

மத்திய அமைச்சா் அமித் ஷா, சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன்  முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

DIN

சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் மத்திய அமைச்சா் அமித் ஷா, தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகளுடன்  முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, சென்னையில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டா் மூலம் வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து காா் மூலம் கந்தனேரி பொதுக் கூட்ட மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் காா் மூலம் அப்துல்லாபுரம் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டா் மூலம் சென்னை திரும்புகிறாா்.

பின்னா், வேலூரிலிருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு வரும் அவா் விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT