சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2,000 ஊழியர்கள்!
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 327 கழிவுநீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது.
மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 மற்றும் 1916 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழையால் முறிந்த மரங்களை அகற்றும் பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.