தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: ஆட்சியர் தகவல்

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல்அனைத்து பள்ளிகளும்  செயல்படும் என ஆட்சியர் ஆல்பா ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்த நிலையிலும் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த வெயில் காரணமாக பகலில் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதற்கிடையே தென்மேற்கு அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  

இதைத் தொடர்ந்து கடந்த 2 நாள்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. இந்த மழையால் மாணவ,மாணவிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே இன்று வழக்கம் போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT