தமிழ்நாடு

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு! விஜய்க்கு மறைமுக விமர்சனம்?

நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கர், காமராஜரை நடிகர் விஜய் படிக்கக் கூறியதை வரவேற்கிறேன். 

DIN

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
சினிமா புகழ் இருந்தால் முதல்வராகிவிடலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். 

நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கர், காமராஜரை நடிகர் விஜய் படிக்கக் கூறியதை வரவேற்கிறேன். 

மக்களுக்கு பணியாற்றி சிறைக்குச் சென்றவர்களை ஓரம் கட்டிவிட்டு மக்களை கவர்ந்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். 

தமிழகத்தில் மட்டும்தான் தனது மார்க்கெட்டை இழக்கும் காலத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கின்றனர். 

கேரளத்தில் நடிகர் மம்மூட்டி, கர்நாடகத்தில் நடிகர் ராஜ்குமார், மகாராஷ்டிரத்தில் அமிதாப் பச்சன் என யாரும் தனது சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT