தமிழ்நாடு

செந்தில் பாலாஜி விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சா் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று(புதன்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில் ஒவ்வொரு பகுதியிலும் தலைமைக் கழக நிா்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும் அதிமுக முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். 

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT