அடுத்த 2 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை தொடரும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஜூலை 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
இந்நிலையில், இரவு 7 மணிவரை கடலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.