முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:


மேட்டூர் அணை நீர்வரத்து 121 கன அடியாக சரிந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. புதன்கிழமை காலை வினாடிக்கு 226 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை 121 கன அடியாக சற்று குறைந்துள்ளது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.40 அடியில் இருந்து 91.43 அடியாக சரிந்துள்ளது. நாளொன்றுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்து வருகிறது.

அணையின் நீர் இருப்பு 54.30 டி.எம்.சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →