கமல்ஹாசன் முன்னிலையில் மநீம-வில் இணைந்த 200 மீனவர்கள்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் மீனவர்கள் 200 பேர் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் மீனவர்கள் 200 பேர் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நமது கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில், சென்னை மாவட்ட மீனவர்கள் 200 பேர் பிரதீப் குமார் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.
அத்துடன் வடசென்னை மாவட்ட பாஜக மாவட்ட மீனவரணி செயலாளர் லோகேஷ் தலைமையில் அக்கட்சித்தொண்டர்களும் தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
கூட்டத்தினர் முன்னிலையில், கமல்ஹாசன், மீனவர் இன்னல் களைய கட்சி பாடுபடும், கட்சியில் மீனவர் அணி துவங்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.