முகப்பு
தமிழ்நாடு

சேலத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 143 பேர் 155 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சேலம்: பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 143 பேர் 155 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வுக்கான முன்னேற்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.

முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர். 

சேலம் மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →