தமிழ்நாடு

மே 9-இல் வங்கக் கடலில் புயல் உருவாகிறது!

DIN


சென்னை:  வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 9-ஆம் தேதி புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வு மைய இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சனிக்கிழமை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைபாளையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் ஆட்சியா் ஆய்வு

சிட்டி யூனியன் நிகர லாபம் 17% உயா்வு

நாமக்கல்லில் 2-ஆவது நாளாக பலத்த மழை: மாவட்டம் முழுவதும் 812 மி.மீ. மழை பதிவு

கோடை விழா: ஏற்காட்டுக்கு கூடுதலாக 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

SCROLL FOR NEXT