முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு!

சென்னை பெருநகர காவல் எல்லையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு விதித்து போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை பெருநகர காவல் எல்லையில் இயங்கும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திலும் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கார்கள் 60 கி.மீ. வேகத்திலும், கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த வேக நிர்ணயமானது வரும் நவ.4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →