தமிழ்நாடு

தஞ்சையில் பரபரப்பு... "நீட் விலக்கா" - "மது விலக்கா" இரவோடு இரவாக மாறிய போஸ்டர்கள்!

தஞ்சாவூரில் இரவோடு இரவாக "நீட் விலக்கா" - "மது விலக்கா" என்ற வாசகத்துடன் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது. 

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இரவோடு இரவாக "நீட் விலக்கா" - "மது விலக்கா" என்ற வாசகத்துடன் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது. 

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதே போல் நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சை மாநகரம் முழுவதும் சிகப்பு - கருப்பு வண்ணத்தில் "நீட் விலக்கு நமது இலக்கு" என்ற வாசகத்துடன் முக்கிய வீதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த போஸ்டர்கள் யார் ஒட்டியது, எந்த கட்சியினர் ஒட்டியுள்ளனர் என்பது குறித்து போஸ்டரில் எதுவும் இடம் பெறவில்லை. 

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு அந்த போஸ்டர்களின் நீட் என்ற வார்த்தைக்கு பதிலாக மேலே கருப்பு ஸ்டிக்கரில் மது என்ற வார்த்தை உள்ள ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இதனால் நீட்டுக்கு பதிலாக மது என்ற வார்த்தை மாற்றி "மது விலக்கு நமது இலக்கு" என்ற வகையில் அந்த போஸ்டர்கள் தஞ்சை மாநகரம் முழுவதும் காட்சியளிக்கின்றன.

இரவோடு இரவாக தஞ்சை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள "நீட் விலக்கா" - "மது விலக்கா" போஸ்டர்களால் பரபரப்பு நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT