முகப்பு
தமிழ்நாடு

கோவையில் எ.வ.வேலு உறவினர் மீனா ஜெயகுமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
கோவையில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார்.
பகிர்:


கோவை: கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயகுமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அங்கு காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மீனா ஜெயகுமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனப்படும் நிலையில் இவரது கணவர் ஜெயகுமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.