தமிழ்நாடு

மதுரை - சென்னை: கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள்!

சென்னையிலிருந்து மதுரை சென்றவர்கள் திரும்புவதற்காக மதுரையிலிருந்து கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

DIN


சென்னையிலிருந்து மதுரை சென்றவர்கள் திரும்புவதற்காக மதுரையிலிருந்து கூடுதலாக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து வரும் 15ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று திங்கள் கிழமை (நவ. 13) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவ. 14) வேலைநாள் என்பதால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் மதுரையிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக 140 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 15ஆம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT