கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

DIN


தொடர் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கெனவே நாளை (நவ. 15) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால்,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 - 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

SCROLL FOR NEXT