முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 25 நவம்பர், 2023 at 1:44 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை முதல்(நவ.25) மீண்டும் இரு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முத்துப்பட்டினத்தில் உள்ள எஸ். ராமச்சந்திரன், குழத்திரான்பட்டியில் உள்ள கரிகாலன் ஆகிய இருவரின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement

மத்திய ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல் 1 மணியளவில் இந்த சோதனை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று திண்டுகல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.