தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் சனிகிழமை(நவ.25) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,755-க்கும், ஒரு சவரன் ரூ.46,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,735-க்கும், ஒரு சவரன் ரூ.45,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க | ராஜஸ்தான்: 11.30 மணி நிலவரப்படி 24.74% வாக்குகள் பதிவு!
அதேபோன்று, வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1.00 உயர்ந்து ரூ.80.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.