தமிழ்நாடு

தேவூர்: மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பலி; 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் 

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி, தைலாங்காடு பகுதியில் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்தில் 7 ஆடுகள் உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. 

தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி தைலாங்காடு பகுதியில் விவசாயிகள் வீடுகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் சனிக்கிழமை இரவு மர்ம விலங்கு கந்தசாமியின் 6 ஆடுகளையும், பழனிசாமியின் 1 ஆட்டினையும் கடித்தில் இறந்து விட்டன.

மேலும், அதே பகுதியில் பல்வேறு விவசாயிகளின் ஆடுகளை கடித்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.  மர்ம விலங்கு கடித்தில் ஆடுகள் பலத்த காயமடைந்தும், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் திரியும் மர்ம விலங்கினை பிடிக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT