தமிழ்நாடு

வங்கக் கடலில் புயலுக்கான வாய்ப்பு அதிகரிப்பு!

DIN

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெற்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நாளைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் தமிழகம் முதல் ஒடிசா இடையே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT